மேலும் செய்திகள்
அம்மன் கோவிலில் ஜூன் 6ல் திருவிழா
30-May-2025
அரும்பாக்கம்:பூந்தமல்லி நெடுஞ்சாலையில், அரும்பாக்கம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற பாஞ்சாலி அம்மன் கோவிலில், 42ம் ஆண்டு தீமிதி திருவிழா, கடந்த 28ம் கொடியேற்றத்துடன் துவங்கியது.முதல் நாளான கடந்த 6ம் தேதி, அதே பகுதியில் உள்ள உத்தனாட்சி அம்மன் கோவிலில் இருந்து, திரளான பக்தர்கள் 1,008 பால்குடம் ஏந்தி, தீச்சட்டியுடன் அலகு குத்தி ஊர்வலமாக வந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.நேற்று காலை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு 7:00 மணிக்கு அம்மனுக்கு சந்தனக் காப்பும், சாத்துப்படி புஷ்ப அலங்காரத்துடன் தீமிதி விழாவும் நடந்தது. அதில், 350க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தீ மிதித்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
30-May-2025