உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வடபழனி முருகன் கோவிலில் தெப்ப உற்சவம் கோலாகலம்

வடபழனி முருகன் கோவிலில் தெப்ப உற்சவம் கோலாகலம்

சென்னை:வடபழனி முருகப் பெருமான் கோவிலில், பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, மூன்று நாள் தெப்ப உற்சவம், நேற்று விமரிசையாக துவங்கியது. முதல் நாள் தெப்பத்தில், வடபழனி ஆண்டவர் வலம் வந்து அருள்பாலித்தார்.கடந்த 8ம் தேதி துவங்கி, மூன்று நாட்கள் நடந்த லட்சார்ச்சனையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்தனர்.பங்குனி உத்திர திருவிழா, நேற்று முன்தினம் விமரிசையாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பால் காவடி எடுத்து வேண்டுதல் நிறைவேற்றினர்.நேற்று முதல், நாளை வரை மூன்று நாட்கள், இரவு 7:00 மணிக்கு தெப்பத் திருவிழா சிறப்பு அலங்காரம், வேதபாராயணம், நாதஸ்வர கச்சேரியுடன் நடக்கிறது.நேற்றைய தெப்பத்தில் வடபழனி ஆண்டவர் புறப்பாடு நடந்தது. இரண்டாம் நாளான இன்று, சண்முகர், வள்ளி, தெய்வானை புறப்பாடும், நாளை சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை புறப்பாடும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை