உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கேளம்பாக்கம் - தி.நகர் போதிய பஸ்கள் இல்லை

கேளம்பாக்கம் - தி.நகர் போதிய பஸ்கள் இல்லை

சென்னை:கேளம்பாக்கம் -- கோவளம் சாலையில் கேளம்பாக்கம் பேருந்து நிலையம் இருக்கிறது. இங்கிருந்து, தாம்பரம், தி.நகர், பிராட்வே உள்ளிட்ட இடங்களுக்கு, மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.மாநகர பேருந்துகளில் தினமும் பல ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர். ஆனால், போதிய அளவில் பேருந்துகள் இல்லை.இது குறித்து, கேளம்பாக்கத்தைச் சேர்ந்த பயணியர் சிலர் கூறியதாவது:கேளம்பாக்கத்தில் மின்சார ரயில் வசதி இல்லாத நிலையில், வெளியூர் பயணத்துக்கு பேருந்துகளை நம்பி இருக்கின்றனர். இங்கிருந்து பல்வேறு வழித்தடங்களில் மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. குறிப்பாக, பயணியர் அதிகமாக செல்லும், தி.நகர், பிராட்வே உள்ளிட்ட இடங்களுக்கு தேவைக்கு ஏற்ப போதிய பேருந்துகள் இல்லை. பேருந்துகளுக்காக 45 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே, பயணியர் தேவையை கருத்தில் வைத்து, கூடுதல் பேருந்துகளை இயக்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை