உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எண்ணுார் அனல் மின் நிலைய குடியிருப்புகள் சமூக விரோதிகளின் புகலிடமாகும் அவலம் படம் உண்டு

எண்ணுார் அனல் மின் நிலைய குடியிருப்புகள் சமூக விரோதிகளின் புகலிடமாகும் அவலம் படம் உண்டு

எண்ணுார், எண்ணுார் - கத்திவாக்கம் மூன்று வழி மேம்பாலம் அருகே, எண்ணுார் அனல்மின் நிலையம் செயல்பட்டது. இங்கு பணியாற்றிய, 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள், தங்கள் குடும்பத்தினருடன் வசிக்க, அனல்மின் நிலையம் எதிரே, எர்ணாவூர் மற்றும் எர்ணாவூர் குப்பம் அருகே என, மூன்று பிரிவுகளாக குடியிருப்புகள் இருந்தன.இந்நிலையில், குடியிருப்பு - 2 எர்ணாவூரில் பயன்பாட்டில் இருந்த, 200க்கும் மேற்பட்ட அனல்மின் நிலைய ஊழியர்களின் குடியிருப்புகள் பலவீனமடைந்தது. வாழ லாயக்கற்ற நிலையில் அபாயகரமானதாக மாறியது. இதையடுத்து, குடியிருப்புகளில் வசித்தவர்கள் வெளியேற்றப்பட்டு, மற்ற இரண்டு குடியிருப்புகளில் காலியாக இருந்த வீடுகளில் குடியமர்த்தப்பட்டனர்.அதன்படி, செப்., 2023ல், எர்ணாவூர், குடியிருப்பு - 2 அனல்மின் நிலைய குடியிருப்பு வளாகம் மூடி, அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. ஆனால், மூடப்பட்ட அனல் மின் நிலைய குடியிருப்பு வளாகத்தில், வெளியாட்கள் செல்லும் படி, வழி உள்ளது. இதனால், 'குடி'மகன்கள், சமூக விரோதிகள் அந்த வளாகத்தினுள் தஞ்சமடைகின்றனர்.அசம்பாவிதம் நிகழும் முன், அனல் மின் நிலைய நிர்வாகம், தற்காலிக நடவடிக்கையாக, அந்த வளாகத்திற்கு காவலாளி நியமிக்க வேண்டும். நிரந்தர தீர்வாக, அபாயகரமான கட்டடங்களை இடித்து அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ