முதல்வர் ஸ்டாலினுக்கு நிகராக எதிர்க்கட்சியில் யாரும் இல்லை
கோடம்பாக்கம், சென்னை தென் மேற்கு மாவட்டம், தி.நகர் கிழக்கு பகுதி, 131வது வட்ட தி.மு.க., சார்பில், துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு, 'ஏன் வேண்டும் தி.மு.க.,' என்ற தலைப்பில், விளக்க உரை கூட்டம், தி.நகர் தக்கர் பாபா வினோபா அரங்கில் நேற்று நடந்தது.மாவட்ட செயலரும், மயிலாப்பூர் எம்.எல்.ஏ.,வுமான வேலு, பகுதிவாசிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.நிகழ்வில், கவுன்சிலரும் தி.நகர் மேற்கு பகுதி செயலருமான ஏழுமலை, 131வது வார்டு கவுன்சிலர் கோமதி மணிவண்ணன், 131வது வட்ட செயலர் வழக்கறிஞர் எம்.கிருஷ்ணமூர்த்தி, மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் மோனிஷா கருணாநிதி, 132வது வட்ட செயலர் வெல்டிங் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தி.நகர் எம்.எல்.ஏ., கருணாநிதி பேசியதாவது:கோபாலபுரத்தில் இளைஞர் அணி மன்றத்தை துவங்கி, 50 ஆண்டுகளாக அரசியலில் இருப்பவர் முதல்வர் ஸ்டாலின். தற்போதுள்ள எதிர்க்கட்சியினர் யாருமே, அவருக்கு நிகர் கிடையாது.நாம் கவனத்துடன் பணியாற்ற வேண்டும்.நம் குடும்பத்தினர் மற்றும் கழகத்தினர் ஓட்டு விடுபட்டுள்ளதா என, முதலில் நீங்கள் ஆராய வேண்டும்.இவ்வாறு பேசினார்.