உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருட போய் வீட்டிற்குள் சிக்கியதால் தற்கொலை மிரட்டல் விடுத்த திருடன்

திருட போய் வீட்டிற்குள் சிக்கியதால் தற்கொலை மிரட்டல் விடுத்த திருடன்

பெரம்பூர் :வியாசர்பாடி, பெரியார் நகரை சேர்ந்த கபீரின் மனைவி ரம்ஜான், 50. இவர், நேற்று முன்தினம் காலை வழக்கம் போல், வீட்டின் அருகே உள்ள தோல் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றார்.போகும்போது வீட்டின் கதவை பூட் விட்டு, செருப்பு வைக்கும் இடத்தில் சாவியை வைத்து விட்டு சென்றார். மதியம் 2:00 மணிக்கு, மதிய உணவு சாப்பிட வீட்டுக்கு வந்தபோது, கதவு திறந்து கிடந்துள்ளது. உள்ளே சென்று பார்த்தபோது, மர்மநபர் ஒருவர் பீரோவை திறந்து, பொருட்களை அலசிக் கொண்டிருந்தார்.சுதாரித்த ரம்ஜான், வெளியே ஓடி வந்து, திருடனை உள்ளேயே வைத்து, வீட்டின் கதவை வெளிப்பக்கமாக தாழ்பாள் போட்டு கூச்சலிட்டார்.அக்கம்பக்கத்தினர் கூடினர். செம்பியம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.வசமாக சிக்கிக் கொண்டதை உணர்ந்த திருடன், 'மரியாதையாக கதவை திறந்து விடுங்கள். இல்லாவிட்டால் உள்ளேயே தற்கொலை செய்து கொள்வேன்' என, வீட்டு உரிமையாளர் ரம்ஜானுக்கு மிரட்டல் விடுத்தார்.மிரட்டலுக்கு பணியாத ரம்ஜான், போலீசார் வந்ததும் திருடனை ஒப்படைத்தனர். விசாரணையில், வியாசர்பாடியை சேர்ந்த ஹசன் பாஷா,25 என்பதும், ஏற்கனவே குற்றவழக்கல் கைதாகி, ஓராண்டு சிறைதண்டனை முடிந்து, விடுதலையானவர் என்பது தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ