உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மண்டல அளவிலான கிரிக்கெட் திருவல்லிக்கேணி அணி வெற்றி

மண்டல அளவிலான கிரிக்கெட் திருவல்லிக்கேணி அணி வெற்றி

சென்னை:சென்னையில் நடந்துவரும் மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டியில், திருவல்லிக்கேணி அணி, நான்கு விக்கெட் வித்தியாசத்தில், ஐ.சி.ஐ., அணியை வீழ்த்தியது.தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், மாநிலம் முழுதும், 50 ஓவர் அடிப்படையில், கிரிக்கெட் போட்டிகள் நடக்கின்றன. நிறுவனங்கள், கல்லுாரிகள், அமைப்புகள் மற்றும் கிரிக்கெட் குழுக்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றுள்ளன.இவை மண்டல அளவில் குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடக்கின்றன. இதில், 'பி' மண்டலம் ஐந்தாவது பிரிவில் இடம் பெற்றுள்ள ஐ.சி.ஐ., அணியும், திருவல்லிக்கேணி அணியும், நேற்று முன்தினம் பலப்பரீட்சை நடத்தின.செங்குன்றம், மாக்னா மைதானத்தில் நடந்த இப்போட்டியில், 'டாஸ்' வென்ற ஐ.சி.ஐ., அணி முதலில் களமிறங்கியது. ஈரப்பதம் காரணமாக ஆடுகளம் பந்து வீச்சிற்கு சாதகமானது. இதனால், ஐ.சி.ஐ., வீரர்கள் ரன் எடுக்கத் திணறியதோடு, விக்கெட்டுகளையும் அடுத்தடுத்து பறிகொடுக்க, அந்த அணி, 41.5 ஓவரில், 123 ரன்களில், 'ஆல் அவுட்' ஆனது.எளிய இலக்குடன் களமிறங்கிய திருவல்லிக்கேணி அணி வீரர்களுக்கு, எதிரணி பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடி தந்தாலும், அந்த அணியின், 'மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்'கள் பொறுப்புடன் ஆடினர்.இதனால், 46.3 ஓவரில், ஆறு விக்கெட் இழப்பிற்கு, 127 ரன்கள் எடுத்த திருவல்லிக்கேணி அணி, நான்கு விக்கெட் வித்தியாசத்தில், 'திரில்' வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை