மேலும் செய்திகள்
தடகளத்தில் வென்ற மூத்தோருக்கு பாராட்டு
14-Oct-2024
சென்னை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 'யாரிடமும் இலவச பரிசு பொருட்கள் வாங்கக் கூடாது; மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்' என, வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கர்க் உத்தரவிட்டு இருந்தார்.இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., அலுவலக தனிப்பிரிவு எஸ்.ஐ., பார்த்திபன், திருவள்ளூர் நகர காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ., பிரபாகரன், ஆரம்பாக்கம் காவல் நிலைய தனிப்பிரிவு போலீஸ்காரர் அருணகிரி ஆகியோர், பரிசு பொருட்கள் வாங்குவதாக ஐ.ஜி.,க்கு புகார் வந்துஉள்ளது.அதேபோல, வெங்கல் தனிப்பிரிவு தலைமை போலீஸ்காரர் கமலநாதன், மப்பேடு தனிப்பிரிவு போலீஸ்காரர் கணேசன், ஆர்.கே.பேட்டை தனிப்பிரிவு போலீஸ்காரர் நடராஜன் ஆகியோரும், பரிசு பொருட்களை அள்ளி குவித்ததாகவும் கூறப்படுகிறது. அவர்கள் மீது மேலும் பல புகார்கள் வந்துள்ளன.இதனால் ஆறு பேரில், பிரபாகரன், பார்த்திபன், அருணகிரி ஆகியோரை, திருப்பத்துார் மாவட்டத்திற்கும், கமலநாதன், கணேசன், நடராஜன் ஆகியோரை கடலுார் மாவட்டத்திற்கும் பணியிட மாற்றம் செய்து, ஐ.ஜி., அஸ்ரா கர்க் உத்தரவிட்டுள்ளார்.
14-Oct-2024