உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மதுக்கூட ஊழியர்களை தாக்கிய மூவர் கைது

மதுக்கூட ஊழியர்களை தாக்கிய மூவர் கைது

வில்லிவாக்கம், கோயம்பேடு பகுதியைச் சேந்தவர் காளிராஜ், 28. இவர், வில்லிவாக்கம், தாழங்கிணறு பகுதியில் மதுபானக் கூடம் நடத்தி வருகிறார். அங்கு, ராட்டின் காந்த்மாலிக் மற்றும் வேலுமணி ஆகிய இருவர், ஊழியராக பணிபுரிகின்றனர்.கடந்த 15ம் தேதி இரவு, மதுக்கூடத்திற்கு வந்த ஐந்து பேர், டேபிள்களை சுத்தம் செய்து கொண்டிருந்த ராட்டின் காந்த்மாலிக்கை தகாத வார்த்தையால் பேசி, வீண் தகராறு செய்தனர்.இதை வேலுமணி கண்டித்தபோது, ஆத்திரமடைந்த ஐந்து பேரும், இருவரையும் பீர்பாட்டிலால் சரமாரியாக தாக்கி தப்பினர்.இது குறித்து விசாரித்த வில்லிவாக்கம் போலீசார், வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ராஜேஷ், 19, ஓட்டேரியைச் சேர்ந்த சூர்யா, 26, மேடவாக்கத்தைச் சேர்ந்த ராஜு ஷியாம், 19, ஆகிய மூவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை