மேலும் செய்திகள்
குட்கா பொருட்கள் விற்றவர் கைது
03-Apr-2025
சென்னை, போரூர், சமயபுரம் பகுதியில் உள்ள மளிகை கடையில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, வானகரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.நேற்று முன்தினம், கடையில் போலீசார் ஆய்வு மேற்கொண்டபோது, 30.7 கிலோ எடையிலான குட்கா புகையிலை பொருட்கள், விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது தெரிந்தது.தொடர்ந்து, போரூர் பகுதியைச் சேர்ந்த சசிகுமார், 42, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ்குமார், 36, ஆகிய இருவரையும், வானகரம் போலீசார் கைது செய்தனர்.அதேபோல், திருவொற்றியூர் பகுதியில், ஆட்டோவில் மாவா விற்பனை செய்து வந்த ஸ்டீபன் சார்லஸ், 50, என்பவரையும், போலீசார் கைது செய்தனர்.அவரிடமிருந்து, 520 கிராம் மாவா, ஒரு மொபைல் போன், ஆட்டோ ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.
03-Apr-2025