உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெண்ணிடம் வழிப்பறி மூவர் கைது

பெண்ணிடம் வழிப்பறி மூவர் கைது

அரும்பாக்கம், மார்ச் 23--

விருகம்பாக்கம், சத்யா நகரை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ, 45. இவர், நேற்று முன்தினம், அரும்பாக்கத்தில் உள்ள தங்கை வீட்டிற்கு சென்று, அங்கிருந்து உறவினருடன் விருத்தாசலம் சென்றார்.பின், அனைவரும், கடந்த 14ம் தேதி அதிகாலை 3:30 மணிக்கு, அரும்பாக்கம் மெட்ரோ பேருந்து நிறுத்தத்திற்கு வந்தனர்.அங்கிருந்து, அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ., காலனி வழியாக, வீட்டிற்கு நடந்து சென்ற போது, ஜெயஸ்ரீ மட்டும் கால் வலியால், தனியாக நடந்து வந்துள்ளார்.அப்போது, திடீரென ஜெயஸ்ரீயை வழிமறித்த மர்ம நபர்கள், கத்தியை காட்டி, கைப்பையை பறித்து தப்பினர்.இதுகுறித்து, அரும்பாக்கம் போலீசார் விசாரித்து, பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சிவசுப்பிரமணியன், 21, சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த திவாகர், 21, மற்றும் சச்சின், 20, ஆகிய மூவரை, போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.மூவரும் கல்லுாரி மாணவர்கள் என்பதால், நீதிமன்ற ஜாமினில் வெளிவந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை