வாலிபருக்கு வெட்டு மூவர் கைது
குன்றத்துார், மாங்காடு அருகே சின்னகொளுத்துவாஞ்சேரியைச் சேர்ந்தவர் தவசீலன், 28; வேன் ஓட்டுநர். இவருக்கும், தாம்பரத்தைச் சேர்ந்த பூபதி, 35, என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.நேற்று முன்தினம் இரவு, வீட்டின் அருகே நின்றிருந்த தவசீலனை, பூபதி மற்றும் அவரது நண்பர்கள், கத்தியால் சரமாரியாக வெட்டி தப்பினர்.தவசீலன், பலத்த வெட்டு காயங்களுடன், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து விசாரித்த மாங்காடு போலீசார், பூபதி, கணேஷ், 20, பாபு, 23, ஆகிய மூவரையும், நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.