உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  12 ஐ - போன் பறித்த மூவர் கைது

 12 ஐ - போன் பறித்த மூவர் கைது

பாரிமுனை: எம்.கே.பி., நகரைச் சேர்ந்தவர் தவுபீக் அப்துல்லா, 26, பாரிமுனை, ஈவினிங் பஜாரில் உள்ள கடையில் வேலை செய்கிறார். டிச., 29ல் 12 'ஐ - போன்'களை 'பார்சல்' அனுப்புவதற்காக, மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்றார். பாரிமுனை, மூக்கர் நல்லமுத்து தெரு சந்திப்பு அருகே, மூன்று பேர் அவரை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி 12 ஐ - போன்களை பறித்துச் சென்றனர். வடக்கு கடற்கரை போலீசார் விசாரித்து, கொருக்குப்பேட்டை சூர்யா, 28, காசிமேடு சந்தோஷ், 25, ஆகிய இருவரை, நேற்று முன்தினம் கைது செய்தனர். தலைமறைவான வியாசர்பாடி திலீப், 35, என்பவரை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி