உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பூக்கடையில் வழிப்பறி செய்த மாணவர் உட்பட மூவர் கைது

பூக்கடையில் வழிப்பறி செய்த மாணவர் உட்பட மூவர் கைது

சவுகார்பேட்டை, சென்னை, சவுகார்பேட்டை, மின்ட் தெருவில், கடந்த 14 ம் தேதி பைக்கில் நின்றிருந்த நாட்டு மருந்துக்கடை ஊழியர் ஹரிபிரசாத் என்பவரிடம், அதே வழியில் வந்த நால்வர் கும்பல் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த பையை பறித்து சென்றனர். இதுகுறித்து பூக்கடை உதவி கமிஷனர் தக்சிணாமூர்த்தி தலைமையில் தனிப்படை போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மணலி, ஜாகிர் உசேன் 2வது தெருவை சேர்ந்த சட்ட கல்லுாரி மாணவர் நரேஷ், 23, மாதவரம் பால் பண்ணை, பச்சையப்பன் கார்டனை சேர்ந்த பிசியோதெரபி மருத்துவர் இதயக்கண்ணன், 21; மணலி, சின்ன சேக்காடு பகுதியை சேர்ந்த மகேஷ், 22 ஆகிய மூவர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிந்தது. இவர்கள் போலீசில் மாட்டி கொள்ளாமல் இருக்க, வழிப்பறிக்கு பின் தங்களது உடைகளை மாற்றிக் கொண்டு தப்பி சென்றது தெரிந்தது.போலீசார் மூவரையும் நேற்று பூக்கடையில் கைது செய்து அழைத்துச் சென்றபோது நரேஷ், மகேஷ் ஆகியோர் தப்பி ஓட முயன்றபோது கீழே விழுந்தனர். இதில் நரேஷ், மகேஷுக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இருவரையும் ஸ்டான்லி மருத்துவமனையில் போலீசார் சிகிச்சைக்கு சேர்த்தனர். சிகிச்சைக்கு பின் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை