உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கத்தியுடன் பதுங்கி இருந்த மூவர் கைது 

கத்தியுடன் பதுங்கி இருந்த மூவர் கைது 

ஆவடி, நெமிலிச்சேரி, மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் நரேந்திரன், 28. இவர், நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் அப்பகுதியினரிடம் தகராறில் ஈடுபட்டார். மது போதையில் இருந்ததால், போலீசார் அவரை சமாதானம் செய்து அனுப்பினர். பின், நேற்று காலை அவரது வீட்டிற்கு சென்று பட்டாபிராம் போலீசார் விசாரித்தனர். அங்கு மூன்று கத்தியுடன் மேலும் இருவர் பதுங்கி இருந்தனர். விசாரணையில், சித்தாலப்பாக்கத்தைச் சேர்ந்த கோகுல், 25 மற்றும் கூடுவாஞ்சேரி, நந்திவரத்தைச் சேர்ந்த காருண்யம், 23 ஆகியோர் என தெரிந்தது. இதையடுத்து, சட்டவிரோதமாக பயங்கர ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்த வழக்கில், போலீசார் மூவரையும் கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை