உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பா.ஜ., பிரமுகரை வெட்டிய மூன்று வாலிபர்கள் கைது

பா.ஜ., பிரமுகரை வெட்டிய மூன்று வாலிபர்கள் கைது

வானகரம்: போரூர் அடுத்த தண்டலம், அண்ணா நகரைச் சேர்ந்தவர் பிரசாந்த், 29; மதுரவாயல் பகுதி பா.ஜ., மண்டல் தலைவர். தன் நண்பர்கள் சக்திவேல், 31, மற்றும் பூபதி, 19, ஆகியோருடன், கடந்த 15ம் தேதி இரவு, அய்யப்பன்தாங்கல் பகுதியில் பேசிக்கொண்டிருந்தார்.அங்கு வந்த தண்டலம் 'பாபா' என்ற பிரசாந்த், 26, விக்னேஷ், 21, விழுப்புரம் சந்தோஷ்குமார், 21, ஆகிய மூன்று பேர், அவர்களை கத்தியால் வெட்டி தப்பினர். வானகரம் போலீசார் அவர்களை நேற்று கைது செய்தனர். அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பாபா என்ற பிரசாந்தை போலீசார் கைது செய்தனர். இதற்கு பா.ஜ., பிரசாந்த் காரணம் என்பதால் அவரை வெட்டியது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ