லாரியில் பைக் மோதி விபத்து திருநெல்வேலி வாலிபர் பலி
மணலிபுதுநகர், கன்டெய்னர் லாரியில் பைக் மோதிய விபத்தில், தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் நந்தி பிரகதீஸ்வரன், 27. மணலி புதுநகரில் தங்கி, நாப்பாளையம், வெள்ளிவாயில் சாவடி பகுதியில் செயல்பட்டு வரும் 'அசோக் லேலாண்ட்' பயிற்சி நிறுவனத்தில் பணிபுரிந்தார். நேற்று மதியம், தன் பைக்கில் மணலி புதுநகரில் இருந்து நாப்பாளையம் நோக்கி, பொன்னேரி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மணலிபுதுநகர், பால்பூத் சந்திப்பு அருகே நின்ற கன்டெய்னர் லாரியில், பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில், நந்தி பிரகதீஸ்வரன் தலையில் பலத்த காயம் அடைந்தார். அங்கிருந்தோர் அவரை, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மாலையில் பரிதாபமாக உயிரிழந்தார். செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.