உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டி.என்.சி.ஏ., லீக் கிரிக்கெட் சிவாஜி அணி இமாலய வெற்றி

டி.என்.சி.ஏ., லீக் கிரிக்கெட் சிவாஜி அணி இமாலய வெற்றி

சென்னை;நடப்பு ஆண்டிற்கான டி.என்.சி.ஏ., 'லீக்' கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில், ஐந்தாவது டிவிஷன், 'டி' மண்டலத்திற்கான போட்டியில், சிவாஜி அணி இமாலய வெற்றியை பதிவு செய்தது. டி.என்.சி.ஏ., எனப்படும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், ஆண்டுதோறும் நடத்தப்படும் லீக் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி, மாநிலம் முழுதும் தற்போது நடந்து வருகிறது. நிறுவனங்கள், அமைப்புகள், சங்கங்கள், கல்லுாரிகள், கிரிக்கெட் கிளப்களில் இருந்து பங்கேற்றுள்ள அணிகள், மண்டலம் வாரியாக பல குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில், சென்னையில் நடந்த 'டி' மண்டலம், ஐந்தாவது டிவிஷன் அணிகளுக்கான ஒரு போட்டியில், சிவாஜி அணியுடன் 'பி அண்டு டி ஆடிட்' அணி பலப்பரீட்சை நடத்தியது. பல்லாவரம் ஜி.இ., மைதானத்தில் நடந்த இப்போட்டியில், முதலில் களமிறங்கிய சிவாஜி அணி, எதிரணியினரின் பந்துகளை துவம்சம் செய்து, ரன் வேட்டையில் ஈடுபட்டது. அந்த அணியின் வீரர் சுதர்சன் 54 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டரி, 11 சிக்ஸர்களை தெறிக்கவிட்டு, 105 ரன்களை எடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் சிவாஜி அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து, 340 ரன்களை எடுத்தது. கடின இலக்குடன் அடுத்து களமிறங்கிய 'பி அண்டு டி ஆடிட்' அணி, 48.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 250 ரன்கள் எடுத்தது. சிவாஜி அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. மற்ற போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை