உள்ளூர் செய்திகள்

 இன்று இனிதாக

ஆன்மிகம் கபாலீஸ்வரர் கோவில் அமாவாசையை முன்னிட்டு, சோமாஸ்கந்தர் அபிஷேகம் - மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர். பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் அபிஷேக ஆராதனை, தரிசனம் - காலை 9:00 மணி முதல். இடம்: காலேஜ் ரோடு, கவுரிவாக்கம். கந்தாஸ்ரமம் பிரத்யங்கிரா தேவி அபிஷேகம் - காலை 10:00 மணி. இடம்: மாகலட்சுமி நகர், சேலையூர். தேவி கருமாரி அம்மன் கோவில் அமாவாசை ஊஞ்சல் சேவை - மாலை 6:00 மணி. இடம்: 3வது தெரு, புதுநகர். காமாட்சி அம்மன் கோவில் உலக நன்மைக்காக, சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ஹோமம் - மாலை 4:00 மணி முதல். இடம்: சங்கர மடம், மேற்கு மாம்பலம். தருமபுரம் ஆதீன சமய பிரசார நிலையம் அரனருள் 21ம் ஆண்டு பன்னிரு திருமுறை 10வது நாள். திருமூலர் விழா. நடராஜர், நால்வர் திருமுறை வழிபாடு. பாராயணம், இசை அரங்கம், சொற்பொழிவு - காலை 8:30 முதல் இரவு 7:30 மணி வரை. இடம்: வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர். சச்சிதானந்த சத்குரு சாய்பாபா கோவில் அமாவாசை அபிஷேகம், ஊஞ்சல், சிரஞ்சீவி ரட்சை வழங்குதல் - காலை 10:00 மணி முதல். இடம்: கணபதி நகர், பள்ளிக்கரணை. பொது 101வது ஆண்டு விழா சிங்காரம் பிள்ளை தொடக்க பள்ளியின் ஆண்டுவிழா - மாலை 4:00 மணி. இடம்: தேவர் தெரு, வில்லிவாக்கம். உணவு வர்த்தக திருவிழா நுார் - -ரம்ஜான் எனும் பெயரில், உணவு திருவிழா - மாலை 3:00 மணி முதல். இடம்: ஒய்.எம்.சி.ஏ., வளாகம், ராயப்பேட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி