உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குப்பை லாரி மோதி வியாபாரி பலி

குப்பை லாரி மோதி வியாபாரி பலி

சென்னை :மாநகராட்சி குப்பை லாரி மோதி பூ வியாபாரி பலியானார். தி.நகர், வடக்கு உஸ்மான் சாலையைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி, 57; பூ வியாபாரி. நேற்று மதியம் பாரிமுனையில் விற்பனைக்கான பூக்களை வாங்கிக் கொண்டு ஆக்டிவா ஸ்கூட்டரில் திரும்பிக் கொண்டிருந்தார். ஓமந்துாரார் அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சென்றபோது, பின்னால் வந்த மாநகராட்சி குப்பை லாரி அவரது ஸ்கூட்டரில் மோதியது. இதில் தடுமாறி விழுந்த போது லாரியின் முன் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி பலியானார். அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்து ஏற்படுத்திய சூளைமேடு என்.ஜி.ஓ., காலனியைச் சேர்ந்த நாகராஜ், 43 என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை