உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / லாரி மோதியதில் வியாபாரி படுகாயம்

லாரி மோதியதில் வியாபாரி படுகாயம்

ஆவடி, அம்பத்துார், இந்திரா நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் முனீஸ்வரன், 50. இவர், பெட்டி கடைகளுக்கு பிஸ்கட், மிக்சர் உள்ளிட்ட பேக்கரி பொருட்கள் விற்பனை செய்து வருகிறார்.நேற்று வழக்கம்போல் அண்ணனுார், திருக்குறள் தெருவில் பொருட்களை வினியோகம் செய்ய, டி.வி.எஸ்., - எக்ஸ்.எல்., மொபட்டில் சென்றபோது, எதிரே வந்த கழிவுநீர் லாரி மோதியதில் பலத்த காயமடைந்தார்.ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், முனீஸ்வரனை மீட்டு, அம்பத்துாரில் உள்ள தனியார் எலும்பு முறிவு மருத்துவமனையில் சேர்த்தனர்.விபத்து ஏற்படுத்திய கழிவுநீர் அகற்றும் லாரி டிரைவரான கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன், 40, என்பவரை கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி