உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  பிராட்வே வழியாக பஸ்கள் வியாபாரிகள் கோரிக்கை

 பிராட்வே வழியாக பஸ்கள் வியாபாரிகள் கோரிக்கை

பிராட்வே: பிராட்வே வழியாக பேருந்துகள் இயக்க வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிராட்வே பேருந்து நிலையம், 650 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வணிக வளாகத்துடன் கூடிய பேருந்து முனையமாக மாற்றும் பணிகள் நடக்கின்றன. இதற்காக, இங்கிருந்து இயக்கப்பட்ட பேருந்துகள், ராயபுரம் மற்றும் தீவுத்திடலில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன. பிராட்வே பகுதியை பொறுத்தவரை பூ, பழம், காய்கறி, துணி, என பல்வேறு சந்தைகள் உள்ள வர்த்தக பகுதியாக உள்ளது. இந்த நிலையில், பேருந்துகள் பிராட்வே வழியாக இயக்கப்படாமல், எஸ்பிளனேடு வழியாக இயக்கப்படுவதால், வியாபாரம் பாதிக்கப்படுகிறது. அதேபோல, பூ, பழம், காய்கறி உள்ளிட்ட சிறு வியாபாரிகள் வந்து செல்வதிலும் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, பிராட்வே என்.எஸ்.சி., போஸ் சாலை வழியாக, பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !