உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கூலி திரைப்படம் ரிலீஸ் போக்குவரத்து பாதிப்பு

கூலி திரைப்படம் ரிலீஸ் போக்குவரத்து பாதிப்பு

தாம்பரம்ரஜினி நடித்து நேற்று வெளியான கூலி திரைப்படம், குரோம்பேட்டை வெற்றி, தாம்பரம் வித்யா ஆகிய திரையரங்குகளில் திரையிடப்பட்டது. இப்படத்தை காண திரண்ட ரசிகர்கள், தங்களின் இருசக்கர வாகனங்களை, ஜி.எஸ்.டி., சாலையிலேயே இஷ்டத்திற்கு நிறுத்தி சென்றதால், மற்ற வாகனங்கள் செல்ல வழியின்றி, 2 கி.மீட்டருக்கு கடும் நெரிசல் ஏற்பட்டது. மற்ற படங்கள் வெளியாகி, இதுபோல் வரிசைகட்டி வாகனங்கள் நிறுத்தப்பட்டால், போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பர். ஆனால், நேற்று, வாகனங்களுக்கு அபராதம் எதுவும் விதிக்கவில்லை. மேற்கண்ட இரு திரையரங்குகளில், முதல் காட்சிக்கு ஒரு டிக்கெட் 1,000 ரூபாய்க்கு விற்கப்பட்டதையும் போலீசார் கண்டுகொள்ளவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை