உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருப்பதி திருக்குடை ஊர்வலத்திற்காக போக்குவரத்து மாற்றம்

திருப்பதி திருக்குடை ஊர்வலத்திற்காக போக்குவரத்து மாற்றம்

பிராட்வே,அதன்படி, இந்தாண்டிற்கான ஸ்ரீ திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலம், சென்னை சென்னகேசவ பெருமாள் கோவிலில் இருந்து நாளை காலை 10:00 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் புறப்படுகிறது.ஹிந்து தர்மார்த்த சமிதியின் நிர்வாக அறங்காவலர் எஸ்.வேதாந்தம், அறங்காவலர் ஆர்.ஆர். கோபால்ஜி ஆகியோர் வெளியிட்டு உள்ள அறிக்கை:சென்னையில் இருந்து ஊர்வலமாகச் எடுத்துச் செல்லப்படும் ஏழுமலையான் கருடசேவைக்கான, வெண்பட்டு திருக்குடைகள் வைகுண்டத்தில் நாராயணனின் படுக்கையாக இருக்கும் ஆதிசேஷனே, பெருமாள் எழுந்தருளும்போது திருக்குடையாகிறார் என்பது ஐதீகம். அந்த அடிப்படையில், திருமலையில் எழுந்தருளியுள்ள ஏழுமலையானுக்கு பிரம்மோற்சவ கருடசேவையின்போது திருக்குடைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன.அக்., 7ம் தேதி, திருக்குடைகள் திருமலையை அடைந்ததும், ஏழுமலையான் கோவில் மாடவீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று, வேங்கடமுடையானுக்கான வஸ்திரம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களுடன் திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்படும்.ஊர்வலம் வரும்போது திருக்குடையின் மீது நாணயங்களை வீசுவதோ, காணிக்கைகள் செலுத்துவதோ கூடாது. நன்கொடைகள் வாங்கப்பட மாட்டாது. உண்டியல் வசூல் கிடையாது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

எந்தெந்த இடங்கள்?

திருக்குடை ஊர்வலத்திற்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.காலை 8:00 மணி முதல் ஊர்வலம் வால்டாக்ஸ் சாலையை கடக்கும் வரை, என்.எஸ்.சி., போஸ் சாலை, மின்ட் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. ஈ.வெ.ரா., சாலை, ராஜாஜி சாலை, பேசின் பிரிட்ஜ் சாலை மற்றும் பிரகாசம் சாலை வழியாக செல்லலாம் மாலை, 3:00 மணி முதல் ஊர்வலம் யானைக்கவுனி பாலத்தை கடக்கும் வரை, வால்டாக்ஸ் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. பேசின் பாலம் சாலை, ராஜாஜி சாலையை பயன்படுத்தலாம். மேலும் ஈ.வெ.ரா., சாலை, முத்துசாமி சாலை மற்றும் ராஜாஜி சாலைகளை பயன்படுத்தலாம் ஊர்வலம் யானைக்கவுனி பாலத்தை கடக்கும் போது, சூளை ரவுண்டானாவிலிருந்து டெமலஸ் சாலை நோக்கிச் செல்ல அனுமதியில்லை. சூளை நெடுஞ்சாலை மற்றும் ராஜா முத்தையா சாலை வழியாக செல்லலாம் ஊர்வலம் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் வரும்போது, டவ்டன் சந்திப்பிலிருந்து பெரம்பூர் பேரக்ஸ் சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அவ்வாகனங்கள் நாராயண குரு சாலை வழியாக செல்லலாம். ஊர்வலம் ஓட்டேரி சந்திப்பை அடையும் போது மில்லர்ஸ் சாலை சந்திப்பிலிருந்து பிரிக்ளின் சாலை வழியாக ஓட்டேரி சந்திப்பை நோக்கிச் செல்ல அனுமதியில்லை. புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாக செல்லலாம் ஊர்வலம் ஓட்டேரி சந்திப்பில் வரும் போது, கொன்னுார் நெடுஞ்சாலை மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பிலிருந்து ஓட்டேரி சந்திப்பை நோக்கிச் செல்ல அனுமதியில்லை. அவ்வாகனங்கள், மேடவாக்கம் குளம் சாலை வழியாக செல்லலாம் ஊர்வலம் கொன்னுார் நெடுஞ்சாலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலை அடையும் போது ஓட்டேரி சந்திப்பு மற்றும் மேடவாக்கம் குளம் சாலையிலிருந்து கொன்னுார் நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லைஓட்டேரி சந்திப்பிலிருந்து குக்ஸ் சாலை வழியாகவும், மேடவாக்கம் குளம் சாலையிலிருந்து வி.பி.காலனி தெரு அல்லது அயனாவரம் சாலை வழியாக செல்லலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ