உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மின்மாற்றி வெடித்து தீ அரும்பாக்கத்தில் மின் தடை

மின்மாற்றி வெடித்து தீ அரும்பாக்கத்தில் மின் தடை

அரும்பாக்கம்: அரும்பாக்கம் குடியிருப்பு பகுதியில், உயர் மின் அழுத்தம் காரணமாக மின்மாற்றி வெடித்ததால், இரவு முழுதும் மின் தடையால் மக்கள் அவதியடைந்தனர். அரும்பாக்கம், வள்ளுவர் சாலையில் உள்ள ஏராளமான குடியிருப்புகளில், ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு, இச்சாலையோரத்தில் இருந்த மின்மாற்றி, திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்தது; அருகில் இருந்த மின் பகிர்மான இணைப்பு பெட்டியும் தீப்பிடித்து எரிந்தது. மின்வாரிய ஊழியர்கள், மின் இணைப்பை துண்டித்ததால், அப்பகுதி முழுதும் இருளானது. கோயம்பேடு தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். இதனால், வள்ளுவர் சாலை மட்டுமின்றி, ஜெகன்நாதன் நகர் முதல் தெரு, காந்தி தெரு உள்ளிட்ட பகுதிகளில், நேற்று காலை வரை மின்தடை ஏற்பட்டது. முதற்கட்ட விசாரணையில், உயர் மின் அழுத்தம் காரணமாக மின்மாற்றி வெடித்ததாக தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை