உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.18.76 லட்சம் மோசடி டிராவல்ஸ் உரிமையாளர் கைது

ரூ.18.76 லட்சம் மோசடி டிராவல்ஸ் உரிமையாளர் கைது

சென்னை, எழும்பூரில் உள்ள பிரபல தனியார் பள்ளியின் முதல்வர், கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்து இருந்தார். அதில், தங்களது பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் என 50 பேரை, வட மாநிலத்திற்கு ஏழு நாட்கள் சுற்றுலா அழைத்துச் செல்ல, டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்த ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த பாலாஜி, 48, என்பவரை அணுகினோம்.அப்போது, 19 லட்சமாகும் என பாலாஜி தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரிடம், மூன்று தவணைகளாக 18.76 லட்சம் ரூபாய் கொடுத்தோம். கடந்தாண்டு அக்டோபரில் பணத்தை பெற்றுக் கொண்டார். இது வரை, சுற்றுலா அழைத்துச் செல்லவில்லை. பணத்தை மீட்டு தருமறு புகாரில் தெரிவித்து இருந்தார்.எழும்பூர் போலீசார் விசாரணையில், 2020ம் ஆண்டே டிராவல்ஸ் நிறுவனத்தை பாலாஜி மூடியதும், பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றி வந்ததும் தெரியவந்தது.மேலும், அவரது மகன் அப்பள்ளியில் படித்து வருவதால், ஆசிரியர்களிடம் பேச்சு கொடுத்து மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. நேற்று அவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை