கல்லறை திருநாள் அனுசரிப்பு கீழ்ப்பாக்கத்தில் அஞ்சலி
கீழ்ப்பாக்கம், நவ. 3-கல்லறை திருநாளை முன்னிட்டு, நேற்று கிறிஸ்தவர்கள் தங்களுடைய குடும்பத்தில் இறந்தவர்களின் கல்லறைகளுக்கு, நேற்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.கல்லறை திருநாளில், உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள், தங்கள் குடும்பத்தில் இறந்தவர்களை நினைவு கூறும் வகையில், அவர்களது கல்லறையில் சிறப்பு பிரார்த்தனைகளுடன் அஞ்சலி செலுத்துவார்.அதன்படி, நேற்று கல்லறை திருநாளை முன்னிட்டு, கீழ்ப்பாக்கம் கிறிஸ்துவ கல்லறை தோட்டத்தில், காலை முதல் ஏராளாமானோர் தங்கள் குடும்பத்தில் இறந்தவர்களின் கல்லறைகளை சுத்தப்படுத்தி, மலர்களால் அலங்கரித்து, பிரார்த்தனை செய்தனர். ஒருசிலர் இறந்த தங்கள் உறவினர்களுக்கு பிடித்தமான உணவு பதார்த்தங்களை கல்லறையில் படைத்து வழிப்பட்டனர். பொதுமக்களின் பாதுகாப்புக்காக, கீழ்ப்பாக்கம் கல்லறையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். இதேபோல், டி.பி.,சத்திரத்தில் உள்ள மாநகராட்சி கல்லறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கிறிஸ்துவ கல்லறைகளிலும் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. அனைத்து சர்ச்களிலும் சிறப்பு திருப்பலி மற்றும் வழிபாடும் நடந்தன.