மேலும் செய்திகள்
வாலிபருடன் தங்கிய பெண் தங்க நாணயத்துடன் ஓட்டம்
25-Oct-2024
விசைத்தறி தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி
23-Oct-2024
அசோக் நகர், பழைய வண்ணாரப்பேட்டை, பார்த்தசாரதி தெருவைச் சேர்ந்தவர் புவனேஸ்வர், 27; தனியார் தொலைக்காட்சி ஊழியர். இவர், நேற்று காலை அசோக் நகரில் உள்ள அலுவலகத்திற்கு 'புல்லட்' பைக்கில் சென்று கொண்டிருந்தார்.அசோக் நகர் காவல் நிலையம் அருகே உள்ள சிக்னலில் சென்றபோது, அதிவேகமாக வந்த ஆட்டோ, பைக் மீது மோதியது.இதில், புவனேஸ்வர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.அவரது இடது கால் மற்றும் மார்பில் காயங்கள் ஏற்பட்டன. ஆட்டோ ஓட்டுநரான, தி.நகர் பாரதி தெருவைச் சேர்ந்த லோகநாதனின், 34, இடது காலில் காயம் ஏற்பட்டது.அங்கிருந்தோர் இருவரையும் மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், புவனேஸ்வர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து, கிண்டி போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.
25-Oct-2024
23-Oct-2024