ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய இருவர் கைது
ஓட்டேரி, ஓட்டேரி, பட்டாளம் ராமானுஜம் கார்டன் தெரு பகுதியை சேர்ந்தவர் தியாகு, 42. ஆட்டோ ஓட்டுநர். நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில், ஓட்டேரி, டோபிகானா பூங்கா அருகே நிறுத்தப்பட்டிருந்த இவரது ஆட்டோவில் சிலர் மது போதையில் அமர்ந்திருந்தனர். இதை தியாகு கேட்டுள்ளார். இதில் தகராறு ஏற்படவே, போதை நபர்கள் தியாகுவை தாக்கியுள்ளனர். இதில் வலது கண்ணில் காயம்பட்ட தியாகு, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தியாகுவின் மனைவி ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தியாகுவை தாக்கிய 'பங்க்' தினேஷ், 25 மற்றும் அரி, 24 ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.