உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  ஆட்டோ டிரைவரை தாக்கிய இருவர் கைது

 ஆட்டோ டிரைவரை தாக்கிய இருவர் கைது

வியாசர்பாடி: வியாசர்பாடி, பி.வி.காலனியைச் சேர்ந்தவர் சரவணன், 35; ஆட்டோ ஓட்டுநர். இவரது வீட்டின் அருகே வசிக்கும் கனிஷ்கர் மற்றும் விக்னேஷ், 21, ஆகிய இருவரும், விக்னேஷின் பிறந்தநாளை நேற்று கொண்டாடினர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்படவே, கனிஷ்கரை அவரது தாய் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டார். மற்றொரு நபரான விக்னேஷிடம் ஆட்டோ ஓட்டுநர் சரவணன் சென்று, 'ஏன் இப்படி சண்டை போடுகிறீர்கள்?' என கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ், தன் நண்பருடன் சேர்ந்து சரவணனை சரமாரியாக தாக்கினார். சரவணன் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, எம்.கே.பி.நகர் போலீசில் புகார் அளித்தார். விசாரித்த எம்.கே.பி.நகர் போலீசார், விக்னேஷ் மற்றும் சுரேஷ், 19, ஆகியோரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை