மேலும் செய்திகள்
வாகன விபத்தால் சிக்கிய திருடர்கள்
07-May-2025
வியாசர்பாடி, வியாசர்பாடி, 'சி' கல்யாணபுரத்தைச் சேர்ந்தவர் பிரவீன்குமார், 23. நேற்று அதிகாலை வீட்டிற்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்தார். பிரவீன்குமாருடன் ஏற்பட்ட தகராறில் அவரை எழுப்பிய நண்பர்களான ராஜேஷ், 38, புருஷோத்தமன், 27 மற்றும் இருவர், கத்தியால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றனர். படுகாயமடைந்த பிரவீன்குமார், சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிரவீன்குமாரின் தாய் உஷா அளித்த புகாரின்படி, வியாசர்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.சம்பவத்தில் ஈடுபட்ட ராஜேஷ், புருஷோத்தமன் ஆகிய இருவரை கைது செய்து கத்தியை பறிமுதல் செய்தனர். இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். தலைமறைவான இருவரை தேடி வருகின்றனர்.
07-May-2025