மேலும் செய்திகள்
ஆதிவாலீஸ்வரர் கோவிலில் உண்டியல் பணம் திருட்டு
14-Sep-2025
மாதவரம்:கோவில் உண்டியலை உடைத்து, திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர். மாதவரம், பொன்னியம்மன்மேடு பெரிய சாலை அருகே நவசக்தி கடம்பாடி ஆலயம் உள்ளது. இதன் பின்பக்கம் உள்ள வினோபாஜி தெருவில், நரசிம்ம ஆலயம் அமைந்துள்ளது. நேற்று காலை, நவசக்தி கடம்பாடி கோவிலை திறந்த போது, உண்டியலையே காணவில்லை. மேலும், நரசிம்ம கோவில் பூட்டை உடைத்து, உள்ளே இருந்த பீரோவில் இருந்து, 5,000 ரூபாயும் திருடப்பட்டிருந்தது. புகாரின்படி, மாதவரம் போலீசார் 'சிசிடிவி' காட்சி பதிவுகளை வைத்து விசாரித்து வந்தனர். இதனிடையே, மாதவரம் பேருந்து நிலையம் அருகே, சந்தேகத்திற்கிடமாக நின்ற இருவரை, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அதில், அவர்கள், மயிலாடுதுறை, தரங்கம்பாடி, தெற்கு தெருவை சேர்ந்த அய்யப்பன், 21, மற்றும் மாதவரம், பொன்னியம்மன்மேடு அய்யர் தோட்டத்தை சேர்ந்த வடிவேலு, 26, எனவும், இருவரும் கோவில் உண்டியலை உடைத்து, திருடியதும் தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து, 2,600 ரூபாயை பறிமுதல் செய்த போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
14-Sep-2025