ஹோட்டலை சூறையாடி பணம் பறித்த இருவர் கைது
ஆதம்பாக்கம் ஆதம்பாக்கம், காந்தி நகர், ஏரிக்கரை தெருவில் ஹோட்டல் நடத்தி வருபவர் தனசேகர், 30. கடந்த 21ம் தேதி இரவு கடைக்கு வந்த இருவர், தனசேகரிடம் வம்பிழுத்து, கடையில் இருந்த பொருட்களை துாக்கி வீசி ரகளையில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் கத்தியை காட்டி மிரட்டி, கல்லாவில் இருந்த 15,000 ரூபாயை பறித்து தப்பி சென்றனர். இது குறித்து ஆதம்பாக்கம் போலீசார் விசாரித்தனர்.இதில், ஆதம்பாக்கம், காந்தி தெருவைச் சேர்ந்த நந்தகுமார், 29, பாலகங்காதர் தெருவைச் சேர்ந்த சந்தோஷ், 28, என்பது தெரியவந்தது. பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இருவரையும் கைது செய்து, 2000 ரூபாய், கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின், இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.