மேலும் செய்திகள்
ரூ.12 கோடி கஞ்சா ஏர்போர்ட்டில் பறிமுதல்
21-Sep-2025
ஆவடி: சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னைக்கு வரும் வாகனங்களை, செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் நேற்று காலை கண்காணித்து, சோதனை செய்தனர். அப்போது, பைக்கில் வந்த இருவரை மடக்கி விசாரித்தனர். அவர்கள் கையில் வைத்திருந்த பைகளை சோதனை செய்தபோது, 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான 15 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிந்தது. விசாரணையில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த குமார், 37, ஜெயராமன், 25, என்பதும், ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததும் தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், புழல் சிறையில் அடைத்தனர்.
21-Sep-2025