உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பொறியாளரிடம் செயின் பறித்த இருவர் கைது

பொறியாளரிடம் செயின் பறித்த இருவர் கைது

சென்னை, அண்ணா நகர், சாந்தி காலனியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ், 31; எஸ்.ஆர்.எம்., பல்கலையில் பொறியாளராக உள்ளார்.கடந்த 12ம் தேதி இரவு, சொந்த ஊரான திருவண்ணாமலை செல்வதற்காக, கிண்டி ரயில் நிலையம் வந்தார்.நடைமேடை மூன்று அருகே, இரண்டு மர்ம நபர்கள் வழிமறித்து, அவரது கழுத்தில் இருந்த, 2 சவரன் செயினை பறித்துச் சென்றனர். மாம்பலம் ரயில்வே போலீசார் விசாரணையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது கொருக்குப்பேட்டை சரண்ராஜ், வியாசர்பாடி விக்ரம் என்பது தெரியவந்தது.நேற்று, இருவரையும் கைது செய்த போலீசார், 2 சவரன் செயினை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை