உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டிவி திருடிய இருவர் கைது

டிவி திருடிய இருவர் கைது

தரமணி:தரமணி, கானகம் பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன், 33, கார் ஓட்டுநர். கடந்த 15ம் தேதி, பணி முடிந்து வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சியடைந்த அவர், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த, 43 அங்குல 'டிவி' திருடப்பட்டது. இதுகுறித்த புகாரின்படி வழக்கு பதிந்த தரமணி போலீசார், திருட்டில் ஈடுபட்ட, அதே பகுதியை சேர்ந்த பவித்ரன், 23, கோகுல், 23, ஆகியோரை கைது செய்து, அவர்களிட மிருந்து 'டிவி'யை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை