உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெண்ணிடம் ரூ.60 லட்சம் மோசடி ஐ.டி., ஊழியர் உட்பட இருவர் கைது

பெண்ணிடம் ரூ.60 லட்சம் மோசடி ஐ.டி., ஊழியர் உட்பட இருவர் கைது

கொளத்துார், கொளத்துாரைச் சேர்ந்தவர் ஜமுனா, 29. இவர், சோழிங்கநல்லுாரில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்தார். இவருக்கு வங்கியில் ஏழு லட்ச ரூபாய் கடன் இருந்துள்ளது. இது குறித்து சக ஊழியரான வண்டலுாரைச் சேர்ந்த ஹரிஷ், 30, என்பவரிடம் கூறி உதவி கேட்டுள்ளார்.அவர், ''தனக்கு தெரிந்த வேளச்சேரியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் பங்குசந்தை தொழிலில் இருப்பதாகவும், அவரிடம் உதவி கேட்டு கடனை அடைக்கலாம்,'' என, ஆலோசனை கூறியுள்ளார்.இதற்காக, கோடம்பாக்கத்தைச் சேர்ந்த மற்றொரு சதீஷ், 32, என்பவர் துணையுடன், ஜமுனாவின் ஆவணங்களை ெஹச்.டி.எப்.சி., வங்கியில் வைத்து, 'ஆன்லைன்' வாயிலாக 7 லட்ச ரூபாய் கடன் பெற்று, ஜமுனாவின் கடனை அடைத்துள்ளனர்.தொடர்ந்து, ஜமுனாவின் ஆவணங்களை ஒன்பது வங்கியில் கொடுத்து, 65 லட்ச ரூபாய் கடன் பெற்றுள்ளனர். அதை ஜமுனாவின் வங்கி கணக்கில் வரவு வைத்து, அதில் 60 லட்ச ரூபாயை ஹரிஷுக்கு தெரிந்த 13 நண்பர்களின் வங்கி கணக்கில் மாற்றியுள்ளனர். இதற்கான மாதத்தவணைகளாக 10 லட்ச ரூபாய் வரை சில மாதம் கட்டி வந்தனர்.கடந்த 2023ம் ஆண்டு செப்., முதல் பணம் எதுவும் ஹரிஷும், சதீஷும் தரவில்லை. மொபைல் போனில் தொடர்பு கொண்டபோது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜமுனா, ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து வண்டலுாரைச் சேர்ந்த ஹரிஷ், 29, மற்றும் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சதீஷ், 32, ஆகியோரை நேற்று கைது செய்தனர். சதீஷ்குமாரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை