உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  மின்சாரம் பாய்ந்த இருவர்: சிகிச்சை பலனின்றி பலி

 மின்சாரம் பாய்ந்த இருவர்: சிகிச்சை பலனின்றி பலி

பெருங்களத்துார்: முடிச்சூரில், கட்டட பணியி ன் போது, மின்சாரம் பாய்ந்து படுகாயமடைந்த இரு தொழிலாளர்கள்கள், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். திருவொற்றியூரைச் சேர்ந்தோர் அன்பு, 50, அய்யப்பன், 38. இருவரும், தாம்பரம் அடுத்த முடிச்சூரில், கட்டட பணியில் ஈடுபட்டிருந்தனர். கடந்த 19ம் தேதி, சாரம் கட்டும் பணியில் ஈடுபட் டிருந்தபோது, மின்சாரம் தாக்கி துாக்கி வீசப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக, அய்யப்பன், அரசு ஸ்டான்லி மருத்துவமனையிலும், அன்பு, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். அங்கு, ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வந்த இருவரும், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதுகுறித்து பீர்க்கன்காரணை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை