உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பாதாள சாக்கடை, மழைநீர்கால்வாய் பணி சுவர் இடிந்தும், மண் சரிந்தும் இருவர் பலி

பாதாள சாக்கடை, மழைநீர்கால்வாய் பணி சுவர் இடிந்தும், மண் சரிந்தும் இருவர் பலி

சென்னை, பாதாள சாக்கடை பணியின்போது மண் சரிந்து ஒருவரும், மழைநீர் வடிகால்வாய் பணியின்போது சுடுகாட்டு சுவர் இடிந்து விழுந்து ஒருவரும் பரிதாபமாக இறந்தனர். மாதவரம் பால் பண்ணையை அடுத்த மூலச்சத்திரம் கூட்டுறவு காலனி பகுதியில், குடிநீர் வாரியம் சார்பில், பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடந்து வருகிறது.இதற்காக 10 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டு ராட்சத குழாய் பதிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.நேற்று மதியம் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மண் சரிவு ஏற்பட்டது. பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த ஊழியர்கள், மயிலாடுதுறை மாவட்டம், கீழ் மாத்துாரை சேர்ந்த வினோத் ராஜ், 32, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மணி,38, ஆகியோர், மண் சரிவுக்குள் சிக்கிக் கொண்டனர். வினோத்ராஜ் சம்பவ இடத்திலேயே மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தார். சக தொழிலாளர்கள் ஒரு மணி நேரம் போராடி, வினோத்ராஜை இறந்த நிலையில் மீட்டனர். காயத்துடன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட மணி, ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து மாதவரம் பால்பண்ணை போலீசார் விசாரித்து வருகின்றனர். இறந்த வினோத்ராஜ்க்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.சுவர் இடிந்து தொழிலாளி பலி ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் கணபதி, 34. மாநகராட்சி ஒப்பந்த ஊழியரான இவர், மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.வளசரவாக்கம் மண்டலம், ராமாபுரம் வள்ளுவர் சாலையில், மழைநீர் வடிகால்வாய் பணிக்காக, ராமாபுரம் சுடுகாடு அருகே சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையால், பள்ளத்தில் மழைநீர் தேங்கி, மண் அரிப்பு ஏற்பட்டது.நேற்று காலை, மழைநீர் வடிகால் அமைக்கும் பணியில் கணபதி ஈடுபட்டார். அப்போது, சுடுகாட்டின் சுற்றுச்சுவர் இடிந்து, கணபதி மீது விழுந்தது. உடல் நசுங்கி, சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். ராமாபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை