மேலும் செய்திகள்
சாலை விபத்தில் பெயின்டர்பலி
04-Nov-2025
கிண்டி: கிண்டி மற்றும் சைதாப்பேட்டையில் நடந்த இரு வேறு விபத்துகளில், இருவர் பலியாகினர். ஒருவர் படுகாயமடைந்தார். மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்தவர் யோகேஷ், 22. இவர், உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் பணிபுரிந்தார். இவர் நேற்று, நண்பர் பிரதீஷ், 20, என்பவருடன், இருசக்கர வாகனத்தில் கிண்டியில் இருந்து வீடு நோக்கி புறப்பட்டார். சைதாப்பேட்டை, ஆடு தொட்டி மேம்பாலத்தில் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம், தடுப்பு சுவரில் மோதியது. இதில், யோகேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். பிரதீஷ் பலத்த காயமடைந்தார். அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர். அதேபோல், கிண்டி கவர்னர் மாளிகை எதிரே, நேற்று சாலையை கடக்க முயன்ற அடையாளம் தெரியாத, 45 வயது மதிக்கத்தக்க நபர், கார் மோதி பலியானார். அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார், கார் ஓட்டுநரான நுங்கம்பாக்கத்தை சேர்ந்த கபிலன், 29, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
04-Nov-2025