உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பிரியாணியில் பல்லி சிறுவர்கள் இருவர் அட்மிட்

பிரியாணியில் பல்லி சிறுவர்கள் இருவர் அட்மிட்

ஆர்.கே.நகர்,கொருக்குப்பேட்டை, அம்பேத்கர் பாலம் அருகில் 'பிஸ்மி பீப்' பிரியாணி கடை உள்ளது. இங்கு, அதே பகுதியைச் சேர்ந்த ேஹமசந்திரன் என்பவர், நேற்று முன்தினம் மூன்று பீப் பிரியாணி வாங்கினார்.தன் உறவினரான பழைய வண்ணாரப்பேட்டை, காட்பாடா நியூ லேபர் லைனைச் சேர்ந்த ஜெயந்தி, 52, என்பவரின் வீட்டில் சாப்பிட கொடுத்துள்ளார்.பிரியாணியை, ஜெயந்தி, 52, ஜெயந்தியின் சகோதரி மகள் சுவாதி, 25, ஜெயந்தியின் மகள் சரண்யா, 32, சுவாதியின் மகன்கள் ரஸ்வந்த், 6, ராஜா, 4, ஆகியோர் பிரியாணி பார்சலை பிரித்து சாப்பிட்டனர்.சுவாதி அவரது பார்சலை பிரித்து சாப்பிட்டபோது, அதில் சிறிய பல்லி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்த நிலையில், பிரியாணி சாப்பிட்ட இரு சிறுவர்கள் உட்பட ஐந்து பேர் வாந்தி எடுத்து மயங்கினர்.அக்கம்பக்கத்தினர் அனைவரையும் மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதில், ஜெயந்தி, சுவாதி, சரண்யா ஆகியோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். ரஸ்வந்த், ராஜா ஆகியோர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவலறிந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், கடையில் சோதனை மேற்கொண்டு பூட்டி 'சீல்' வைத்தனர். ஆர்.கே.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை