இரட்டை கொலையில் மேலும் இருவர் கைது
சென்னை, கோட்டூர்புரம் சித்ரா நகரைச் சேர்ந்தவர் அருண், 25; ரவுடி. இவரது அண்ணன் அர்ஜுனன், 27. சகோதரர்கள் இருவரும், கடந்த, 16ம் தேதி இரவு கோட்டூர்புரத்தில், நண்பர்களுடன் மது அருந்தி விட்டு, உறங்கி உள்ளனர்.அப்போது வந்த ஒரு கும்பல், அருண், சுரேஷை கொடூரமாக வெட்டிக் கொன்றது.கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிந்து, முக்கிய குற்றவாளியான சிங்கப் பெருமாள் கோவிலைச் சேர்ந்த, 'சுக்குகாப்பி' சுரேஷ், 26 உட்பட, 13 பேரை கைது செய்தனர். இந்நிலையில், வழக்கில் தொடர்புடைய கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஆனந்த், 20, சுவர் ஓவிய தொழில் செய்து வந்த கார்த்திக், 22 ஆகிய இருவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.