மேலும் செய்திகள்
களை கட்டும் கந்து வட்டி தொழில்
07-Jan-2025
ஆர்.கே.நகர், கொருக்குப்பேட்டை, டாக்டர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர்கள் ரோசய்யா, காமராஜர் நகரைச் சேர்ந்த திருப்பதி, 50. துாய்மை பணியாளர்களான இருவரும் கொருக்குப்பேட்டை, சிகிரிந்தபாளையம் 4வது தெருவைச் சேர்ந்த 'கந்து வட்டி' முருகன் என்பவரிடம், முறையே 1 லட்ச ரூபாய் மற்றும் 1.25 லட்சம் ரூபாய் கடன் வாங்கி உள்ளனர். வாங்கிய கடன் மற்றும் அசல் செலுத்தியும் கூடுதல் வட்டி கேட்டு மிரட்டுவதாக ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.ஏற்கனவே, கடந்த 11ம் தேதி, கந்துவட்டி கொடுமையில் சிக்கி தவிப்பதாக, கந்து வட்டி முருகன் மீது, வண்ணாரப்பேட்டை துணை கமிஷனரிடம் இரண்டு துாய்மை பணியாளர்கள் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
07-Jan-2025