உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காஸ் சிலிண்டர் திருடிய வழக்கு மேலும் இரு வாலிபர்கள் கைது

காஸ் சிலிண்டர் திருடிய வழக்கு மேலும் இரு வாலிபர்கள் கைது

மடிப்பாக்கம்:மடிப்பாக்கம், வைகை தெருவை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவர், மும்பையில் வசித்து வருகிறார்.இந்நிலையில், இவரின் மடிப்பாக்கம் வீட்டு கிரில் கேட் பூட்டு உடைந்திருப்பதை கண்ட இவரின் நண்பர் தணிகை அரசு, 59, அதுகுறித்து, கல்யாணசுந்தரத்திற்கு தகவல் தெரிவித்து, வீட்டினுள் சென்று பார்த்துள்ளார்.அப்போது, வீட்டிலிருந்த காஸ் சிலிண்டர் திருடு போயிருந்தது. இதுகுறித்து, மடிப்பாக்கம் காவல் நிலையத்தில், தணிகை அரசு அளித்த புகாரின்படி, கடந்தாண்டு ஆக., 20ல், ஜெகதீசன் என்பவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில், தலைமறைவாக இருந்த, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வினோத், 29, வேளச்சேரியைச் சேர்ந்த பர்வீன்குமார், 29, ஆகியோரை, நேற்று முன்தினம், மடிப்பாக்கம் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ