உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஒயர் திருடிய சிறுவன் உட்பட இருவர் கைது

ஒயர் திருடிய சிறுவன் உட்பட இருவர் கைது

ராஜமங்கலம்:விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஹரிராமன், 32; கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், ராஜமங்கலம் - செங்குன்றம் சாலையில் புதிதாக கட்டிவரும் கட்டடத்தில் இருந்து, கடந்த 27ம் தேதி மின் ஒயர்கள் திருட்டு போயின.இது குறித்து ராஜமங்கலம் போலீசார் விசாரித்தனர். இதில், கொளத்துார், முருகன் நகரைச் சேர்ந்த விக்னேஷ், 20, மற்றும் 17 வயது சிறுவன் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.போலீசார் இருவரையும் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின், விக்னேஷ் சிறையில் அடைக்கப்பட்டார்.சிறுவன், அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ