உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சண்டையை விலக்க சென்ற இருவருக்கு கத்திக்குத்து

சண்டையை விலக்க சென்ற இருவருக்கு கத்திக்குத்து

புளியந்தோப்பு,:புளியந்தோப்பு, கே.பி.பார்க் குடியிருப்பைச் சேர்ந்தவர் விக்னேஷ், 26. இவரது மனைவி கல்பனாவுடன் சண்டை ஏற்பட்டுள்ளது. குடியிருப்பின் வெளியே மனைவியை விக்னேஷ் அடித்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த சந்துரு மற்றும் யுவராஜ் ஆகிய இருவர், விக்னேஷை தடுத்துள்ளனர். இந்நிலையில், விக்னேஷ்க்கு ஆதரவாக பிரேம்குமார் மற்றும் மனோஜ்குமார் ஆகிய இருவரும், சந்துரு மற்றும் யுவராஜை கத்தியால் வெட்டியுள்ளனர். இதில் காயமடைந்த சந்துரு மற்றும் யுவராஜ் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.சம்பவம் தொடர்பாக மருத்துவமனை அளித்த தகவலின் பேரில், புளியந்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விக்னேஷ், 26, பிரேம்குமார், 21 ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மனோஜ் குமார் என்பவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ