உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டூ - வீலர் திருடியவர் சிக்கினார்

டூ - வீலர் திருடியவர் சிக்கினார்

மேல்மருவத்துார்: மேல்மருவத்துாரில், பைக் திருடிய நபர் சிக்கினார். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை சேர்ந்தவர் சின்னப்பன், 60. கடந்த மே மாதம், தனக்கு சொந்தமான, 'ஹீரோ டீலக்ஸ்' பைக்கை, மேல்மருவத்துார் ரயில் நிலையத்தின் வெளியே நிறுத்தி, சென்னைக்கு வேலைக்கு வந்துள்ளார். பின், மேல்மருவத்துார் செல்லும்போது பைக் திருடு போனது தெரிந்தது. அதிர்ச்சியடைந்தவர், இது குறித்து மேல்மருவத்துார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரின் விசாரணையில், அச்சிறுபாக்கத்தைச் சேர்ந்த சுரேஷ், 35 என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. போலீசார் அவரை நேற்று கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி