உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / உதயநிதி பிறந்தநாள்: துாய்மை பணியாளர்களுக்கு விருந்து

உதயநிதி பிறந்தநாள்: துாய்மை பணியாளர்களுக்கு விருந்து

சென்னை, தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா, நேற்றுமுன்தினம் கொண்டாடப்பட்டது.இதையொட்டி, ஓ.எம்.ஆரில், 195வது வார்டு கவுன்சிலரும், மற்றும் நகரமைப்பு நிலைக்குழு உறுப்பினரும், தி.மு.க., வட்ட செயலருமான ஏகாம்பரம், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின், மேட்டுக்குப்பம், ஈஸ்வரன்நகர், சுலைமாநகரில் வசிக்கும், 500 பேருக்கு பிரியாணி வழங்கினார். துாய்மை பணியாளர்களுக்கு, மதிய உணவும் வழங்கினார். தி.மு.க, நிர்வாகிகள், தொண்டர்கள் உடன் இருந்தனர். தொடர்ந்து, கட்சி நிகழ்ச்சிகளில் தொண்டர்களுடன் ஏகாம்பரம் பங்கேற்று, அவர்களை உற்சாகப்படுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை