உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ. 30 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட பூங்காவை திறந்தார் உதயநிதி

ரூ. 30 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட பூங்காவை திறந்தார் உதயநிதி

சென்னை, நுங்கம்பாக்கம், எம்.ஓ.பி., வைஷ்ணவா மகளிர் கல்லுாரி அருகே உள்ள மாநகராட்சி பூங்காவை, அக்கல்லுாரி நிர்வாகம், நமக்கு நாமே திட்டத்தின்கீழ், 30 லட்சம் ரூபாய் செலவில் சீரமைத்தது. அவற்றை, தமிழக துணை முதல்வர் உதயநிதி நேற்று திறந்து வைத்தார்.இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி கூறியதாவது : நுங்கம்பாக்கத்தில் மாநகராட்சி பூங்கா முறையான பராமரிப்பு இல்லாமல் காணப்பட்டது. எம்.ஓ.பி.,வைஷ்ணவா கல்லுாரி நிர்வாகத்தினர், 30 லட்சம் ரூபாய் செலவில், பல்வேறு வசதிகளுடன் சீரமைத்துள்ளனர்.இதன் வாயிலாக சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 2,000 பேர் பயன் அடைவர். பூங்கா பராமரிப்புக்காக, மூன்று பேர், காவல் பணிக்கு இருவரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, சென்னை மேயர் பிரியா, துணை மேயர், மகேஷ் குமார், மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ