உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இயக்கப்படாத சிக்னல்கள் ராயப்பேட்டையில் அச்சம்

இயக்கப்படாத சிக்னல்கள் ராயப்பேட்டையில் அச்சம்

சென்னை:பிரதான சாலை சந்திப்பில் உள்ள போக்குவரத்து சிக்னலை போலீசார் இயக்காததால், தாறுமாறாக செல்லும் வாகனங்களால் நெரிசல் ஏற்படுவதுடன், விபத்து அபாயமும் நிலவுகிறது.ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலை - வெஸ்ட்காட் சாலை - பாரதி சாலை சந்திப்பில், போக்குவரத்து சிக்னல் உள்ளது. ஆனால், இந்த சிக்னல் இயக்கப்படுவதில்லை.இதேபோல், தி.நகர் ஜி.என்.செட்டி சாலை - ராகவையா சாலை - ஸ்ரீனிவாசா சாலை சந்திப்பில் உள்ள சிக்னலும் இயக்கப்படுவதில்லை.இதனால், தாறுமாறாக செல்லும் வாகன ஓட்டிகளால் நெரிசல் ஏற்படுவதோடு, இப்பகுதிகளில் விபத்து அபாயமும் நிலவுகிறது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இந்த பகுதிகளில் உள்ள போக்குவரத்து சிக்னல்களை இயக்க, போக்குவரத்து போலீசாரை பணியமர்த்த வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ